அன்பிற்கினிய வலைவழி உறவுகளே!
https://seebooks4u.blogspot.com/2017/08/blog-post.html
வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக மின்நூல்களை வெளியிட முன்வந்திருக்கிறது. இவற்றை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாகப் (இலவசமாகப்) பகிரவுள்ளோம். “மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017” என்னும் முயற்சியில் இரண்டு மின்நூல்களை வெளியிடுவதில் மகிழ்வடைகின்றோம்.
- செம்மொழியாம் தமிழைக் காப்போம்
- உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி – 01
மேற்காணும் இரண்டு மின்நூல்களில் பதினான்கு அறிஞர்களுக்கும் அதிகமானோர் தமது எண்ணங்களைப் பகிர்ந்துள்ளனர். இவ்விரண்டு மின்நூல்களிலும் தமிழின் தொன்மை, தமிழின் எதிர்காலம், உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி எனப் பல ஆய்வுப் பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. வாசகர் கருத்துகள் இணைக்கப்பட்டிருக்கிறது. சிறந்த தமிழ் அறிஞர்கள் மதிப்புரை வழங்கியுள்ளனர். இவ்விரண்டு மின்நூல்களையும் கருத்திற்கொண்டு பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வினைச் செய்ய பயனுள்ள தகவல் நிறையவே உண்டு.
தமிழ் பேசும் மக்கள் வாழும் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இவ்விரண்டு மின்நூல்களையும் பத்து நூறாயிரத்திற்கு (இலட்சத்திற்கு) அதிகமான வாசகர்கள் வாசிக்கும் வண்ணம் வலைப்பதிவர்கள் எல்லோரும் இவற்றைப் பகிர்ந்து உதவுங்கள். திறனாய்வாளர்கள் எல்லோரும் இவ்விரண்டு மின்நூல்களுக்கும் வலுச்சேர்க்கும் முகமாகத் தங்கள் திறனாய்வினைத் தந்துதவுங்கள். பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் உயர்நிலைக் கல்லூரி, பாடசாலை ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களை வாசிக்கத் தூண்டவும் பலருக்குப் பகிரச் செய்யவும் உதவுங்கள்.
வலை வழி ஊடகங்களும் இலத்திரனியல் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும் இவ்விரண்டு மின்நூல்களின் உயர்ந்த நோக்கத்தையும் உயர்ந்த எண்ணங்களையும் பகிர்ந்து உதவுங்கள். இவ்வாறு இவ்விரண்டு மின்நூல்களுக்கும் கிடைக்கும் ஆதரவினை வைத்து நன்கொடையாளர்களின் உதவியினைப் பெற்று நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் உள்ள பொது நூலகங்களுக்காவது இலவசமாக அச்சடித்து இந்நூல்களை வழங்க முடியுமென நம்புகின்றோம். இதற்கு மேல் நானுரைப்பது அழகல்ல; நூல்களைப் பதிவிறக்குங்கள்; நூல்களுக்குள் புகுந்து தேடல்களைச் செய்யுங்கள்; உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள்.
இலகுவாகக் குளிர்மையாகப் பார்வையிட
http://fliphtml5.com/homepage/mjnyg
வழமையாகப் பார்த்துப் பதிவிறக்க
https://app.box.com/s/a89mh19jwuaqr2oneom4u8sh3v1qwc8u
உலகெங்கும் வலைவழியே நற்றமிழைப் பரப்பிப் பேண ஒன்றிணைவோம்.